-->

Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான மறுநியமனை தொடர்பான பள்ளிக்கல்வித் துறையின் புதிய விளக்கம்!!

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான மறுநியமனை தொடர்பான பள்ளிக்கல்வித் துறையின் புதிய விளக்கம்!!

 

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மறுநியமனம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித் துறை, கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான மறுநியமனம் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வியாண்டின் நடுவில் ஓய்வுபெற்றால், அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாள் வரை (அதாவது ஏப்ரல் மாதம்) பணியாற்ற மறுநியமனம் வழங்கப்பட்டு வந்தது.

இதை மாற்றி, மே மாதம் வரை மறுநியமனம் வழங்க அனுமதி கோரியும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதமே ஆசிரியர்களுக்கான மறுநியமனத்தின் கடைசி மாதமாகும் எனத் தெளிவுபடுத்தி, அதனைப் பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பினால், ஓய்வுக்காலத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


Post a Comment

0 Comments